சத்திய வேதம் (ரேனியஸ்-1840)
சீவனுடைய வழியையெனக்குத் தெரியப்படுத்துவீர். உம்முடைய சமுகத்திலே சந்தோஷங்களின் பரிபூரணமும், உம்முடைய வலதுபாரிசத்திலே செல்வபாக்கியங்களும் என்றைக்குமிருக்கும்.
பரிசுத்த வேதாகமம் (பவர்-1867)
ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்தியபேரின்பமும் உண்டு.
திருவிவிலியம்; (பொது-1995)
வாழ்வின் வழியை நான் அறியச்செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.
பரிசுத்த பைபிள் (இ.ஆர்.வி-1998)
சரியான வழியில் வாழ நீர் எனக்கு போதிப்பீர்; கர்த்தாவே, உம்மோடிருப்பதே எனக்கு பூரண ஆனந்தம் தரும், உம் வலதுபுறத்தில் தங்குவதே என்றென்றும் இன்பம் தரும்.